Skip to main content

துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பீனிக்ஸ் பறவையாய் எழுந்தவரின் கதை..!

May 02, 2019
Image

கிருஷ்ணகுமார்

கட்டுரையாளர்

Image

டிஸ்னி...சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேருக்கும் மிகவும் பரிட்சயமான பெயர். இந்த பெயரை கேட்காமல் குழந்தை பருவத்தை கடப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே எனலாம். 90ஸ் கிட்ஸின் தாத்தா பாட்டிகளுக்கே பரிட்சயமானது மிக்கி மவுஸ், மின்னி மவுஸ், கூபி, சின்ரெல்லா, டொனால்ட் டக்,ஸ்னோ ஒயிட், டார்சன் போன்ற பெயர்கள். இந்த பெயர்களெல்லாம் அத்தனை பேரையும் குழந்தை பருவத்திற்கே கொண்டு செல்பவை. ஏனெனில் இந்த கதாபாத்திரங்கள் எல்லாம் அவர்களது குழந்தை பருவத்தை அழகாக்கியவைகள். 

ஸ்பைடர்மேன், தானோஸ், கேப்டன் அமெரிக்கா, அயர்ன் மேன், ஹல்க் போன்ற கதாபாத்திரங்கள் இன்றைய குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அத்தனை பேரின் பேவரிட் சூப்பர் ஹீரோக்கள். காமிக்குகள் குழந்தைகளுக்கு கற்பனைத் திறனை வளர்க்கிறதென்றால், அனிமேஷன் படங்கள் அந்த கற்பனை உருவங்களுக்கு உயிர் கொடுக்கின்றன. இன்றைய சூழ்நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரின் கற்பனைகளுக்கும் தீனி போடுவது டிஸ்னி தான். உலக அளவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த டாப் 5 படங்களை வரிசைப்படுத்தினால் அதில் மூன்று டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்பாக இருக்கிறது. உலகின் மொத்த பொழுது போக்கு சந்தையின் பெரும்பாலனவற்றை டிஸ்னியே ஆக்கிரமித்திருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் இவையெல்லாம் பிரம்மாண்டமாக தெரியலாம். ஆனால் இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்குப்பின்னால் துரோகத்தால் வீழ்ந்து, பீனிக்ஸ் பறவையாய் எழுந்த சரித்திரங்கள் இருக்கின்றன.

வால்ட் டிஸ்னி. மேலே சொன்ன அத்தனையும் நிகழ்வதற்கான காரணகர்த்தா. வால்ட் டிஸ்னி 1901ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இலியாஸ் சார்லஸ் டிஸ்னி (Elias charles Disney) மற்றும் ஃப்ளோரா கால் டிஸ்னி (Flora call disney) தம்பதியினருக்கு நான்காவது மகனாக பிறந்தார். வால்ட்டின் குடும்பம் அடிப்படையில் மிகவும் ஏழ்மையானது. வேலையின் நிமித்தமாக அடிக்கடி தாங்கள் வாழும் இடங்களை மாற்றிக்கொண்டே இருந்தார் இலியாஸ் டிஸ்னி. டிஸ்னிக்கு ருத் டிஸ்னி என்ற தங்கையும், ஹெர்பர்ட் டிஸ்னி, ரே டிஸ்னி,ராய் ஓ டிஸ்னி என்ற மூன்று சகோதரர்களும் உண்டு. இலியாஸ் டிஸ்னி மிகவும் கோபக்காரராக இருந்தார். வேலையில் ஏற்பட்ட இயலாமையின் காரணமாக வீட்டில் இருப்பவர்களிடம் அந்த கோபத்தை வெளிப்படுத்துபவராக இருந்தார். வால்ட்டிற்கு 4 வயதாக இருந்த போது இலியாஸ் தனது குடும்பத்தினருடன் தனது மூத்த சகோதரர் ராய் வாங்கியிருந்த பண்ணை நிலத்தில் இருந்த வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். அந்த ஆண்டிலேயே வால்ட்டின் சகோதரர்கள் ஹெர்பெர்ட் மற்றும் ரே டிஸ்னி ஆகியோர், தந்தை இலியாஸ் டிஸ்னியின் கொடுமை தாங்க முடியாமலும், முடிவில்லா வேலைப்பளுவின் காரணமாகவும் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டனர்.


1909ம் ஆண்டில் தி நியூ பார்க் ஆஃப் மெர்சிலினில் தான் முதன் முதலாக பள்ளி படிப்பிற்காக சேர்க்கப்பட்டார் வால்ட் டிஸ்னி. அதுவும் தனது இளைய சகோதரி ருத் உடன். வால்ட்டின் குடும்பம் நான்கு ஆண்டுகள் தான் மெர்சிலினில் தங்கியிருந்தது. பின்னர் தாங்கள் இருந்த பண்னை நிலம் விற்கப்பட 1911ம் ஆண்டு கன்சாஸ் நகருக்கு குடி பெயர்ந்தது.  கன்சாஸ் நகருக்கு இடம் பெயர்ந்ததும் அங்கிருந்த பெண்டன் க்ராம்மர் பள்ளியில் ருத்தும், வால்ட்டும் சேர்க்கப்பட்டனர். அந்த பள்ளியில் தான் Pfeiffer  உடன் வால்ட்டுக்கு நட்பு ஏற்பட்டது. Pfeiffer தான் வால்ட்டுக்கு மோஷன் பிக்சர்ஸ் மற்றும் வாடெவில்லெ எனும் கார்ட்டுன் தொடரையும் அறிமுகம் செய்து வைத்தார். படங்கள் வரைவதில் இயல்பிலேயே ஆர்வம் அதிகம் இருந்த வால்ட் முதலில் செய்த வேலை சனிக்கிழமைகளில் கன்சாஸ் நகரத்தில் இருந்த வரைகலை பயிற்சிப்பள்ளியில் சேர்ந்தத்து தான்.


பின்னர் கன்ஸாஸ் சிட்டி ஸ்டார் என்ற பத்திரிகை விநியோகிக்கும் உரிமையை பெற்று அதை நடத்தத்தொடங்கினார் வால்ட்டின் தந்தை. தந்தைக்கு உதவியாக வால்ட் மற்றும் ராய் ஆகியோர் பேப்பர் போடவும் தங்கள் நியூஸ் பேப்பர் விநியோகத்தை விளம்பரம் செய்யவும் பணிக்கப்பட்டனர். காலையில் கன்சாஸ் சிட்டி டைம்ஸ் நாளிதழை 700 பேருக்கும், மாலையில் சண்டே ஸ்டார் பத்திரிகையை மாலையில் 600 பேருக்கும் விநியோகிக்க வேண்டியது இருவரது வேலை. எந்த விதமான சூழ்நிலையிலும் பேப்பர் விநியோகம் தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காக, வால்ட்டை அநியாயத்திற்கு வேலை வாங்கினார் இலியாஸ் டிஸ்னி. பேப்பர்  போடுவதிலேயே டிஸ்னியின் காலம் கழிந்தது. எங்கிருந்து படிப்பைத் தொடர? பாதிநாள் பள்ளிக்கு செல்வதில்லை. பேப்பர் போட்டு சம்பாதித்த தொகைகளை எல்லாம் இலியாஸ் டிஸ்னி பிடுங்கிக்கொண்டு சென்றுவிடுவார். எனினும் அந்த நாளிதழ் எடிட்டருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட வால்ட் தனியாக பேப்பரை விநியோகம் செய்து அதன் மூலம் சிறுவருவாயை ஏற்படுத்திக்கொண்டு தன் தந்தைக்குத் தெரியாமல் அதை சேமித்து வைக்க ஆரம்பித்தார். அந்த தொகைதான் வால்ட் தொழில் தொடங்க ஆரம்ப காலத்தில் உதவியாக இருந்தது.

வால்ட், தான் சேர்த்து வைத்திருந்த தொகைகளைக் கொண்டு சிகாகோவில் இயங்கிக்கொண்டிருந்த ஓ-ஸெல் ஜெல்லி தொழிற்சாலையின் பங்குகளை வாங்கி பங்குதாரர் ஆனார். அதே நேரத்தில் சிகாகோவிற்கு வால்ட்டின் குடும்பம் இடம் பெயர்ந்திருந்தது. வால்ட் மீண்டும் பள்ளி படிப்பை மெக்கின்லி உயர்நிலைப்பள்ளியில் தொடங்கினார். அதே நேரத்தில் சிகாகோ அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்சில் சேர்ந்து இரவு நேரங்களில் ஓவியப்பயிற்ச்சியும் எடுத்துக்கொண்டார். இந்த நேரத்தில் தான் முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. பள்ளியில் நடத்தப்பட்ட  ஒரு செய்தித்தாளிற்கு புரட்சிகர ஓவியங்கள் வரைந்து கொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். 1918ம் ஆண்டு பள்ளி படிப்பிற்கு முழுக்குப்போட்டுவிட்டு போரில் பங்கேற்பதற்காக சென்றார் வால்ட். வால்ட் போரில் கலந்துகொள்ள உந்துதலாக இருந்தவர் அவரது சகோதரர் ராய் டிஸ்னிதான். ஆனால் போரில் பங்கேற்க 17 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்ததால் வால்ட்டை போரில் ஈடுபடுத்த அரசு தயாரில்லை. ஆனால் வால்ட் விடவில்லை. தனக்கு 17 வயது ஆகிவிட்டதாக போலியாக ஒரு பிறப்புச் சான்றிதழை தயாரித்து, வேலையிலும் சேர்ந்துவிட்டார். ரெட்கிராஸ் ஆம்புலன்ஸ் சர்வீஸில் ட்ரைவராக பணியமர்த்தப்பட்டு ஃப்ரான்சுக்கு அனுப்பப்பட்டார். அந்த ஆம்புலன்சிலும் தனது ஓவியத்திறமையை காட்ட அது சக வீரர்களிடையே வரவேற்பைப்பெற்றது. வால்ட் போரில் சேர்ந்த நேரம் போர் முடிவுக்கு வந்து விட்டது. எனினும் ஓராண்டு அங்கேயே தங்கி வேலை பார்த்த வால்ட் 1919ம் ஆண்டு திருப்பி அனுப்பப்பட்டார். மீண்டும் ஊருக்கு திரும்பிய டிஸ்னி ஓ-ஸெல் தொழிற்சாலையில் உதவியாளராகவும், இரவு நேரங்களில் வாட்ச்மேன் வேலையும் செய்யத் தொடங்கினார்.  அங்கு தான் இவருக்கு ஓவியங்கள் வரைய நேரம் கிடைத்தது. தனக்கு கிடைத்த நேரத்திலெல்லாம் ஓவியங்கள் வரைந்து தள்ளத் தொடர்ங்கினார் வால்ட். அதிலும் விலங்குகளை வரைவதென்றால் வால்ட்டுக்கு பிரியம் அதிகம்.


1919ல் தொழில்முறை ஓவியர் ஆனார் வால்ட். மீண்டும் கன்சாசுக்கே திரும்பிய வால்ட் ஓவியராக தனது கேரியரை துவக்கினார். அங்கிருந்த படியே செய்தித் தாள்களில் வந்த கேலி சித்திரங்களை வரைந்து பழகினார். ப்ரோவின்சியல் செய்திதாள் நிறுவனத்தில் ஓவியராக சேர முயற்சி செய்ய அது தோல்வியிலேயே முடிந்தது. இந்த இடத்தில் தான் வால்ட்டின் சகோதரர் ராய், வால்ட்டிற்கு ஒரு தற்காலிக வேலை கிடைக்க, வங்கியில் வேலை பார்த்த தன் நண்பர் ஏற்பாடு செய்தார். அவர் அதற்கு முன் பெஸ்மென் ருபின் ஆர்ட் ஸ்டுடியோவில் வேலை பார்த்தவர் என்பதால் அவர் மூலம் அங்கு வால்ட்டிற்கு வேலைகிடைக்க ஏற்பாடு செய்தார். செய்தித்தாள்கள், வார இதழ்கள், தியேட்டர்களுக்கு ஓவியம் வரைந்து கொடுக்கும் வேலையை அதுவும் மாதம் 50 டாலர் என்ற சொற்ப சம்பளத்திற்கு செய்ய ஆரம்பித்தார். பின்னர் அந்த வேலையும் ஒரு கிறிஸ்துமஸில் முடிவுக்கு வந்துவிட, வால்ட்டிற்கு மீண்டும் வேலையில்லை. இருப்பினும் அங்கு இருந்த சிறிது காலத்திலேயே ஒரு தொழிலை எவ்வாறு விளம்பரப்படுத்த வேண்டும் என்ற நுணுக்கத்தைக் கற்றிருந்தார் வால்ட். அதை தானே செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் வால்ட்டிற்கு ஏற்பட உடனடியாக செயலில் இறங்கினார். துணைக்கு பெஸ்மெ-ரூபின் ஆர்ட் ஸ்டுடியோவில் தன்னுடன் பணியாற்றிய கார்ட்டுனிஸ்ட் இவெர்க்ஸ்(Ub Iwerks) சேர்ந்துகொண்டார். 


இருவரும் இணைந்து 1920 ஜனவரியில் இவெர்க்ஸ் - டிஸ்னி கமர்சியல் ஆர்டிச்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினர். வால்ட்டிற்கு கிடைத்த முதல் கஸ்டமர் ஒரு பதிப்பகம் நடத்துபவர். அவர் உணவகங்கள் பற்றிய செய்திகளையும் வெளியிட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு கார்டூன்கள் வரைந்து கொடுக்க ஆரம்பித்தனர் இருவரும். இவெர்க்சும் டிஸ்னியும், பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு பாத்ரூமை தங்கள் பணிசெய்யும் இடமாக மாற்றிக்கொண்டனர். தங்கள் வேலைக்குத் தேவையான பொருட்களை தான் சேர்த்து வைத்திருந்த தொகையின் மூலம் வாங்கிக்கொண்டார் வால்ட். வருமானம் ஓரளவிற்கு வர, தனது நிறுவனத்தை அச்சு மற்றும் பதிப்பக நிறுவனமாக விரிவுபடுத்திக்கொண்டார் வால்ட். வால்ட்டின் நிறுவனம் வெற்றிகரமாக இயங்கத்தொடங்கியது. தங்கள் நிறுவனத்தை வேறு ஒரு புதிய இடத்திற்கு மாற்றினர். கையில் கொஞ்சம் காசு சேர உள்ளூர்  சினிமாவிற்கு வார இறுதிகளில் இருவரும் செல்ல ஆரம்பித்தனர். அங்கே தான் அவர்கள் முதன் முதலாக கார்டூன்களை பார்த்து அதிசயித்தனர். ஒரு நாள் வால்ட் செய்தித்தாளை படித்துக்கொண்டிருந்த போது கன்சாஸ் நகரத்தில் இருந்த திரைப்பட விளம்பர நிறுவனத்திற்கு அனிமேட்டர்கள் தேவை என்ற விளம்பரத்தை எதேட்சையாக 
கவனித்துவிட, தனது நிறுவனத்திலிருந்து தற்காலிகமாக விடுவித்துக்கொண்டு அந்த விளம்பர நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். வால்ட்டின் ஓவியத்திறமையை பார்த்த அந்த நிறுவனம் வால்ட்டிற்கு வாரம் 40 டாலர்களை சம்பளமாக கொடுத்தது. கன்ஸாஸ் சிட்டி திரைப்பட விளம்பர நிறுவனத்தில் பணியாற்றியபோது அனிமேஷன்கள் மூலம் விளம்பரம் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டார் வால்ட். அந்த நிறுவனத்தில் வால்ட்டுக்கு வழங்கப்பட்ட சம்பளத் தொகை குறைவாக இருந்ததால் அதிலிருந்து வெளியேறி நாமே இவெர்க்ஸுடன் இணைந்து அனிமேஷன்களை உருவாக்கலாமே எண்ணம் ஓட ஆரம்பித்தது. உடனடியாக செயலில் இறங்கினார்.


வால்ட், செல்லுலாய்ட் அனிமேஷன்களில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்ள, அனிமேட்டர்களிடையே ஒரு ஸ்டாராக உருவெடுத்தார். உடனடியாக லா-ஓ-க்ராம் ஸ்டுடியோ என்ற அனிமேஷன் நிறுவனத்தை தொடங்கினார். 1922ல் லா-ஓ-க்ராம் ஸ்டுடியோ உதயமானது. கன்ஸாஸ் சிட்டி திரைப்பட விளம்பர நிறுவனத்தில் தன்னுடன் பணியாற்றிய ஃப்ரெட் ஹர்மேனை தனது  நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக்கொண்டார். தன் ஆரம்பகாலத்தில் இருந்து தன்னுடன் இருந்த இவெர்க் இல்லாமல் நிறுவனமா? இவெர்க்கையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார் வால்ட். கூடவே ஃப்ரெட் ஹார்மனின் சகோதரர் ஹக் ஹர்மன் மற்றும் ருடால்ஃப் இசிங் சேர்ந்து கொள்ள நிறுவனம் விரிவடைந்தது. 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் முதலீடாக கிடைத்தது அந்த நிறுவனத்திற்கு. fairy tales ரக அனிமேட்டட் குறும்படங்கள் இரண்டை தயாரித்து நாடுமுழுவதும் விநியோகம் செய்தார். இரண்டு குறும்படங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் வால்ட்டுக்கு எந்த வருமானமும் விநியோகஸ்தர்களிடமிருந்து வரவில்லை. தொழிலில் நஷ்டம் ஏற்பட தன்னிடமிருந்த கேமரா மற்றும் தனது அலைஸ் இன் ஒண்டர்லேண்ட் ஓவியங்களை விற்று கடனை அடைத்தார். ஆனாலும் கடன் தீர்ந்த பாடில்லை, கடன்சுமை ஒரு பக்கம், கடன் கொடுத்தவர்கள் ஒரு பக்கம் என வால்ட்டை அழுத்த, சரியான உணவு மற்றும் உடை கூட இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார். 

முதல் முறையாக மொத்தமும் இழந்து நடுத்தெருவிற்கு வந்துவிட்டர் வால்ட். ஒரு பல்மருத்துவருக்கு அனிமேஷன் விளம்பரம் செய்து தரக்கோரி அழைப்பு வர, மருத்துவரை சந்திக்க செல்லும்போது அணிந்துகொள்ள ஷூ கூட இல்லாததால் கூச்சத்தில் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் வால்ட். இந்த விஷயம் அந்த மருத்துவருக்கு தெரிய வர ஒரு ஷூ வாங்கிக்கொடுத்ததொடு, அனிமேஷன் குறும்படத்திற்காக 500 டாலர்களையும் முன்தொகையாக வழங்கினார். வால்ட் தயாரித்துக் கொடுத்த அந்த குறும்படம் மருத்துவருக்கு திருப்தியை கொடுத்தது. ஆனால், வால்ட்டால் அந்த குறும்படத்தால் கிடைத்த வருவாயைக் கொண்டு கடனை அடைக்க முடியவில்லை. அதன் பின் சிறு சிறு குறும்படங்கள் தயாரித்தாலும் பெரிய அளவில் வருமானம் இல்லை. கன்சாஸிலிருந்து, கலிபோர்னியா மகாணத்தில் இருந்த ஹாலிவுட்டுக்கு இடம்பெயர்வது என முடிவு செய்தார் வால்ட். 1923ல் ஹாலிவுட்டுக்கு இடம் பெயர்ந்தார். ஹாலிவுட் அந்த நேரத்தில் அனிமேஷன் உலகின் தலைமையிடமாக மாறியிருந்தது. ஏற்கனேவே வால்ட்டின் சகோதரர் ராய், கலிபோர்னியாவில் குடியேறியிருந்தார். அங்கு சென்ற வால்ட் காலையில் இருந்து இரவு வரை அந்த பகுதிகளை சுற்றிவந்து படப்பிடிப்புகள் எப்படி நடைபெறுகிறது என்பதை அறிந்துகொண்டார். 

வேலை ஏதும் இல்லையெனில், நானே சுயமாக ஏதாவது செய்வேன் என்பதை தனக்குள் அடிக்கடி சொல்லிக்கொள்வார் வால்ட். ராய், தனது மாமா ராபர்ட் டிஸ்னியிடம் இருந்து சிறு கேரேஜை வாடகைக்குப்பிடித்து ஒரு ஸ்டுடியோவை தொடங்கினர். செல்லுலாய்ட் முறையில் படம் வரையும் இரண்டு கலைஞர்களை வேலைக்கு சேர்த்துக்கொண்டனர். அதோடு அலைஸ் வொண்டர்லேண்ட் குறும்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தையும் சேர்த்துக்கொண்டனர். வாடகைக்கு கேமராவை வாங்கி அதை கேரேஜுக்கு கொண்டுவந்தனர். ராய்க்கு கேமராவை இயக்கும் பொறுப்பு. வால்ட்டுக்கு அனிமேஷன் பொறுப்பு. அக்டோபர் 1923ல் டிஸ்னி ப்ரதர்ஸ் கார்டுன் ஸ்டுடியோ அபீஷியலாக உருவானது.

வால்ட் மற்றும் ராய் இணைந்து அலைஸ் காமெடிஸை உருவாக்கினர். படம் உருவாக்கியாயிற்று அதை விநியோகிக்க விநியோகஸ்தர்கள் வேண்டுமல்லவா. விநியோகஸ்தரை தேடும் படலம் தொடங்கியது. கடைசியாக மார்கரெட் ஜெ.வின்கர் என்னும் கார்டூன் விநியோகஸ்தர் கிடைக்க, அவர் டிஸ்னி பிரதர்ஸ் தயாரித்த 12 அலைஸ் காமெடி தொடர்களை விநியோகிக்க ஒப்பந்தம் செய்துகொண்டார். இவர்கள் இணைந்து முதல் காமெடி தொடரான அலைஸ் டே அட் சி யை வெளியிட்டனர். இதன் மூலம் அவருக்கு 1500 டாலர்கள் வருவாயாக கிடைத்தது. பின்னர் தங்கள் ஸ்டுடியோவை கேரேஜிலிருந்து கிங்ஸ்வெல் அவென்யூ பகுதிக்கு மாற்றினர். வால்ட் முதன் முறையாக ரோலின் ஹாமில்டன் என்ற அனிமேட்டரை பணிக்கு அமர்த்தினார். 

கூடவே தனது உற்ற நண்பர் இவெர்க்குக்கும். தனது குடும்பத்தினரையும் கலிபோர்னியாவிற்கு கொண்டுவந்தனர் டிஸ்னி ப்ரதர்ஸ். வால்ட் தன் நிறுவனத்திற்கு ஹாக் ஹார்மன் மற்றும் ருடால்பை மீண்டும் கொண்டுவந்தனர். கூடவே தொழில்நுட்ப கலைஞர்களான லில்லியன் பௌண்ட்ஸ் மற்றும் இன்கெர் ஆகியோரையும் சேர்த்துக்கொண்டார். அதே ஆண்டில் லில்லியனை திருமணம் செய்துகொண்டார் வால்ட். இந்த நேரத்தில் அலைஸ் வொண்டர்லேண்ட் மக்களிடையே பெற்றிருந்த வரவேற்பை இழந்திருந்தது. வேறு ஒன்றை உருவாக்கியே ஆகவேண்டிய சூழல். ஆஸ்வால்ட் த லக்கி ராபிட் என்ற கதையை உருவாக்கினர். 1926ல் சார்லஸ் மிண்ட்ஸ் என்பவரிடமிருந்து ஒரு ஆர்டர் வருகிறது. யுனிவர்சல் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்திற்கு அனிமேட்டட் கார்ட்டுன் தொடர்களை கொடுக்கவேண்டும் என்று. சந்தோஷமாக ஒத்துக்கொண்டனர் டிஸ்னி பிரதர்ஸ். உப்பெ இவெர்க்ஸ் ஆஸ்வால்ட் ராபிட் கதாபாத்திரத்தை வரைந்து அதை வைத்து 26 குறும்படங்களை உருவாக்கிவிட்டனர். ஆஸ்வால்ட் முயல் பட்டிதொட்டியெங்கும் போய் சேர்ந்தது. முதலாவது தோல்வியால் துவண்டு போயிருந்த வால்ட்டிற்கு ஒரு பிடிப்பு கிடைத்தது. 


நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமல்லவா. ஆஸ்வால்ட் ராபிட் கார்டூன் தொடரை தயாரிப்பதற்கான கட்டணத்தை உயர்த்துவது குறித்து பேசுவதற்காக நியூயார்க் சென்றார் வால்ட். ஆனால் நடந்ததோ வேறு. சார்லஸ் மிண்ட்ஸ் ஏற்கனவே கொடுத்துக்கொண்டிருந்த தொகையிலிருந்து 20%த்தை குறைப்பதென முடிவு செய்திருந்தார். இதற்கு வால்ட் ஒப்புக்கொள்ளவில்லை. இதோடு நின்றுவிடவில்லை. வால்ட்டுக்கு மேலும் பல அதிர்ச்சிகள் காத்திருந்தது. ஆஸ்வால்ட் ராபிட்டின் மொத்த காப்புரிமையும் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்தது. அதோடு அத்தைனை தொழில்நுட்ப கலைஞர்களும் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் பணியாற்றிக்கொண்டிருந்தனர். வால்ட்டின் கைகள் கட்டப்பட்டிருந்தது. எனினும் இந்த உடன்பாட்டிற்கு வால்ட் சம்மதிக்கவில்லை. இவெர்க்ஸ் தவிர மற்ற அனிமேட்டர்கள் அனைவரும் யுனிவர்சலோடு சென்றுவிட்டனர். இரண்டாவது முறையாக பெரும் அடி. மீண்டும் எல்லாவற்றையும் புதிதாக தொடங்க வேண்டிய நிலை.  

வாழ்க்கையில் வால்ட்டிற்கு பிடிமானமாக இருந்தது ஆஸ்வால்ட் தான். ஆஸ்வால்ட் தன் கையை விட்டு போனதும் கிட்டத்தட்ட தெருவிற்கு வந்துவிட்டார் டிஸ்னி. வாழ்க்கையில் இரண்டாவது முறை மிகப்பெரிய சறுக்கல். மீண்டும் கலிபோர்னியாவிற்கு ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தார் வால்ட். அப்போது ஆஸ்வால்ட்டுக்கு போட்டியாக ஒன்றை உருவாக்கியாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வால்ட்டின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. வழக்கமாக டிஸ்னி அறையில் குறுக்கும் நெடுக்குமாக ஒரு எலி உற்சாகமாக ஓடி விளையாடிக் கொண்டிருக்கும். சில சமயங்களில் அந்த எலி செய்யும் சிறிய சேட்டைகளை டிஸ்னி வேடிக்கை பார்ப்பார். தனது உணவில் அந்த எலிக்கும் கொஞ்சம் கொடுப்பார். தனக்குப் பிடித்த அந்த எலியைக் கார்ட்டூனாக வரைந்து அதற்கு மனிதக் குணாதிசயங்களைப் புகுத்திக் கற்பனை செய்து பார்த்தார் டிஸ்னி. அந்த கற்பனையிலேயே ஒன்றை வரைந்தார். அது தான் மிக்கி மவுஸ். 


வால்ட், இவெர்க்கிடம் புதிய கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கி தர சொன்னார். அவரும் நாய், பூனை, குதிரை, தவளை என்று பல்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கிக்காட்டினார். எதுவும் வால்ட்டுக்கு திருப்தியளிக்கவில்லை. ஆனால், மொத்த டீமுக்கும் வால்ட் வரைந்திருந்த மிக்கி மவுஸ் கேரக்டர் பிடித்திருந்தது. வால்ட், தான் வரைந்த கற்பனை உருவத்திற்கு முதலில் பெயரிட்டது “Mortimer Mouse” என்று தான். பின்னர் தன் மனைவியின் வற்புறுத்தலுக்கு இணங்க அதை மிக்கி மவுஸ் என்று மாற்றினார். அது சிறந்த வணிகப்பெயராகவும் இருந்தது. பின்னர் முதல் வேலையாக வால்ட் செய்தது மிக்கி மவுஸிற்கு காப்புரிமை பெற்றது தான்.
இன்னும் சொல்லப்போனால் மிக்கி மவுஸின் வடிவத்தை முழுவதும் உருவாக்கியது வால்ட் இல்லை. வால்ட் வரைந்து கொடுத்தது ஒரு இனிஷியல் ஸ்கெட்ச் மட்டுமே. அதற்கு உயிர் கொடுத்தது ஐவெர்க்ஸ் தான். இன்னும் சொல்லப்போனால் தனது ரசிகர் ஒருவருக்காக அவருக்கு ஆட்டோகிராப் போட்டுகொடுக்கும் போது மிக்கியை வரைந்து கொடுத்ததைத் தவிர, மிக்கியை ஒருபோதும் வால்ட் வரைந்ததில்லை. இது பற்றி வால்ட் கூறும்போது “மக்கள் இன்னும் என்னை கார்ட்டுனிஸ்ட் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போதெல்லாம் நான் பேனா அல்லது பென்சிலை கையில் எடுக்கிறேன் என்றால் அது ஒப்பந்தம், செக் அல்லது ஆட்டோகிராப் இடுவதற்காக தான்” என்கிறார்.


1928 மே-ல் மிக்கி மவுஸை வைத்து ப்ளேன் க்ரேஸி என்ற முதல் குறும்படத்தை வெளியிட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வரவேற்பில்லை. ஆனால் வால்ட் விடவில்லை. தொடர் முயற்சிகள் மேற்கொண்டு கதாபாத்திரத்தை மேம்படுத்தி தொடர்களை உருவாக்கினார். அதிலும் சிக்கல். உருவாக்கிய தொடர்களை வெளியிட ஆள் இல்லை. கடைசியில் நவம்பரில் ஸ்டீம்போட் வில்லி என்ற அனிமேட்டட் குறும்படம் முதன் முறையாக ஒலியுடன் வெளியானது. ஒலி மற்றும் ஒளியுடன் வெளியானதால் அது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றது. 1928 முதல் 1947 வரை மிக்கி மவுசின் குரலாக ஒலித்தது வால்ட்டின் குரல் தான். 


மிக்கி மவுஸிற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து 75 எபிசோடுகளைக் கொண்ட அனிமேட்டட் தொடரான சில்லி சிம்பொனி 1939 வரை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வெளியானது. இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இதை விநியோகிக்க கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்தது. 1932ல் மூலைமுடுக்கெல்லாம் போய் சேர்ந்தது மிக்கி மவுஸ். அந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க ஆராய்ச்சியாளரும் பொறியாளருமான ஹெர்பெர்ட் தாமஸ் தன் முதல் மூன்று வண்ண பட்டைகளால் ஆன கேமராவை உருவாக்கியிருந்தார். அதை டிஸ்னியிடம் அறிமுகப்படுத்த கருப்பு வெள்ளை குறும்படங்கள் மூன்று வண்ணங்களில் வெளியாக, அதிசயித்து போயினர் மக்கள். கூடவே கார்ட்டூன் பிரிவில் முதல் ஆஸ்கர் விருதையும் கொண்டுவந்து சேர்த்தது. 


1933ல் த்ரீ லிட்டில் பிக்ஸ் என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட, அது ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. அந்த படத்திற்காக வால்ட் முதலீடு செய்தது 22,000 டாலர்கள். ஆனால் வருமானமாக கிடைத்ததோ 2,50,000 டாலர்கள். கூடவே இரண்டாவது ஆஸ்கர் விருதும் வந்து சேர்ந்தது. நிறுவனத்திற்கு ஏகபோக வருவாய் வர, தொழில்நுட்ப கலைஞர்களை பணிக்கு அமர்த்த வேண்டி வால்ட்டின் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. கிட்டத்தட்ட 6000 விண்ணப்பங்கள் வந்து குவிந்தது என்றால் அந்த நிறுவனம் எந்த அளவிற்கு பிரபலமாகியிருக்கும் என்று யூகித்துக்கொள்ளலாம். அதிலிருந்த் வால்ட் தேர்ந்தெடுத்தது வெறும் 30 விண்ணப்பங்கள் தான். அதிலும் 10 பேரால்தான் வால்ட்டிடம் தாக்குப்பிடிக்க முடிந்தது. அதன் பிறகு பல குறும்படங்கள் வெளியாகி வெற்றிகளை குவித்துக்கொண்டிருந்தாலும் Snow White and the Seven Dwarfs குறும்படம் வால்ட்டை மில்லியனராக்கியது.


1940 இரண்டாவது உலகப்போரில் தனது நிறுவனத்தை ஈடுபடுத்தினார் வால்ட். அமெரிக்காவின் முப்படைகளுக்கு ஆதரவாக தொடர்களை தயாரித்து வெளியிட ஆரம்பித்தது. அதன் பிறகு சின்றெல்லாவை உருவாக்கி வெளியிட ஸ்னோ ஒயிட்டிற்கு பிறகு ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. கார்டூனோடு மட்டும் நின்று விடாமல் தீம் பார்க் கட்டும் முயற்சியிலும் இறங்கினார் வால்ட். தனது மகள்களுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள க்ரிஃப்ஃபித் (griffith observatory) பார்க் சென்றது இதற்கான விதையை வால்ட்டின் எண்ணத்தில் போட்டது. தனது கற்பனை உலகத்திற்கு டிஸ்னிலேண்ட் என்று பெயரும் வைத்து விட்டார் வால்ட். ஆனால் இந்த திட்டத்தை தொடங்க யாரும் முன்வரவில்லை. ஏன் அவரது சகோதரர் ராய் கூட இதற்கு சம்மதிக்கவில்லை. வருவாய் வராது என்ன இது பைத்தியக்காரத்தனமான யோசனை, சேமிப்பு மொத்தமும் போய்விடும் என்று எல்லாம் தடுத்தார்கள். ஆனால் தன் எண்ணத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருந்தார் வால்ட். எப்படியோ பலரிடம் பேசி 5 மில்லியன் டாலர்கள் முதலீட்டை தேற்றினார். 

அப்படியே கலிபோர்னியாவில் அனஹெய்ம் என்ற இடத்தில் 160 ஏக்கர்களை விலைக்கு வாங்கினார். 1954ல் டிஸ்னி லேண்ட் உருவாக்கும் பணிகள் 17 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் தொடங்கியது. டிஸ்னி அமெரிக்காவின் முகமாக உடனடியாக மாறியது. டிஸ்னி திறக்கப்பட்டபோது அனுமதி கட்டணமாக வசூலிக்கப்பட்டது வெறும் ஒரு டாலர் மட்டும்தான். அதன்பிறகு டோக்கியோ, ஹாங்காங்க், பேரிஸ் என நான்கு இடங்களில் டிஸ்னி லேண்ட் உருவாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 16 மில்லியன் மக்கள் கலிபோர்னியா டிஸ்னி லேண்டிற்கு வந்து செல்வதாக தரவுகள் சொல்கிறது. டிஸ்னிக்கு சொந்தமாக 320 கிளை நிறுவனங்கள் உலகம் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது.

வால்ட் என்னதான் பெரிய தொழிலதிபராக இருந்தாலும் தன் குடும்ப வாழ்க்கையிலும் அதிக கவனமெடுத்துக் கொண்டிருந்தார். டிஸ்னி வீட்டில் டிரைவர்கள், பணியாளர்கள் என்று எக்கச்சக்கமாக ஆட்கள் இருந்தபோதும் அவரது இருமகள்களையும் தினமும், தன் காரில் தானே பள்ளிக்கு அழைத்துச் செல்வதையே தன் முக்கிய பணியாகக் கொண்டிருந்தார். குறிப்பாக மீடியாவின் கண்களுக்கு தன் மகள்கள் தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் வால்ட். நீங்கள் உங்கள் தொழிலில் வெற்றியாளராக இருக்க வேண்டுமென்றால் அதற்கு உங்கள் குடும்பத்தை நீங்கள் நன்றாக பார்த்துக்கொள்பவராக இருக்க வேண்டும் என்று கூறுவார் வால்ட். கூறியது மட்டுமல்லாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டினார்.


வால்ட் வெற்றிகரமான தொழிலதிபராக வளர்ந்ததும் தனது பெற்றோர்களை தனது புதிய இல்லத்தில் குடியேற்றினார். அந்த வீட்டில் செய்ய வேண்டிய சில மராமத்து வேலைகளுக்காக வால்ட்டின் பெற்றோர் வால்ட்டின் உதவியை கேட்க, வால்ட் தனது நிறுவனத்தில் பணிபுரியும் சிலரை, வேலைக்கு அனுப்பினார். வீட்டில் இருந்த ஓவனில் பிரச்சனை இருப்பதை பணியாளர்கள் கண்டறிந்தனர். ஆனால் அவற்றை சரி செய்வதில் அலட்சியம் காட்ட, திடீரென ஒருநாள் அதிலிருந்து வெளியான கார்பன் மோனாக்ஸைடு வாயு வெளியேறியதில், மூச்சுத் திணறி வால்ட்டின் அம்மா ஃப்ளோரா உயிரிழந்தார். தந்தையும் விஷ வாயுவால் தாக்கப்பட உடல் நலிவுற்றார். இந்த சம்பவத்தால் மிகவும் வருத்தமுற்றார் வால்ட். தன் தாயின் இறப்பிற்கு தான் தான் காரணமாகிவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி எப்போதும் வால்ட்டின் மனதிற்குள் இருந்து கொண்டே இருந்தது. உடன் பணியாற்றியவர்களுக்கு உரிய சன்மானத்தை வால்ட் கொடுக்காமலும் இல்லை. தெல்மா ஹாவார்ட் தான் வால்ட் வீட்டில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலம் பணியாற்றிவந்த பணிப்பெண். 1951ல் வால்ட் வீட்டில் சமையல் மற்றும் வீட்டு பராமரிப்பு பணிகளை செய்ய நியமிக்கப்பட்டார். 

பணிக்கு சேர்ந்த சில நாட்களிலேயே அந்த வீட்டில் ஒருவராக மாறினார் தெல்மா. அதற்கு பலனாக கைநிறைய சம்பளம் வழங்கியதோடு, ஒவ்வொரு ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போதும் தனது நிறுவனத்தின் பங்குகளை தெல்மாவிற்கு அன்பளிப்பாக வழங்குவதை வழக்கமாகவேக் கொண்டிருந்தார் வால்ட். ஆனால் அந்த பங்குகளை எதற்கும் பயன்படுத்தாமல் அதை அப்படியே வைத்திருந்தார் தெல்மா. 1994ல் தெல்மா உயிரிழக்கையில் தெல்மா ஒரு மல்ட்டி மில்லியனர். அவர் இறக்கும் போது தெல்மாவிடம் இருந்தது கிட்டத்தட்ட 4.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள். அவை அத்தனையும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சில பங்குகள் அவரது மாற்றுத்திறனாளி மகனுக்கும் வழங்கப்பட்டது.

டிஸ்னிக்கு சிறுவயது முதலே ரயில் பயணங்களின் மீது அலாதி பிரியம். டிஸ்னியின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டதும் ஒருவகையில் ரயில் பயணம்தான். தன் அலுவலகத்தின் அருகிலேயே சிறிய அளவிலான ரயில் பாதை அமைத்து தன்னை சந்திக்க வரும் விருந்தினர்கள் அனைவரையும் ரயிலில் வைத்தே சந்தித்தார் வால்ட். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகாலம் ஓவியர், தயாரிப்பாளர், தொழிலதிபர் என்று பல்வேறு முகங்களைக் கொண்டிருந்தாலும் அத்தனையையும் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்தார் வால்ட். வால்ட் தொட்டதெல்லாம் துலங்குகிறது இவர் கைராசிக்காரர் என்று பேச்சு எழுந்தபோது வால்ட் இப்படி சொன்னார். “நான் தொட்ட காரியமெல்லாம் வெற்றி பெறுவதாகவும், நான் எடுக்கும் முடிவுகள் அபூர்வமாகவே தோற்பதாகவும் சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் நான் எடுத்தத் தவறான முடிவுகளால் பல முறை படுதோல்வி அடைந்திருக்கிறேன். எனினும், நான் அடுத்தடுத்து முயற்சி செய்து கொண்டே  இருப்பதால், தவறுகள் வெளியில் தெரியாதபடி அதிலிருந்து வேகமாக மீண்டு வந்திருக்கிறேன். என்னைப்போல நீங்களும் அடுத்தடுத்த ஏராளமான முயற்சிகளை எடுக்கக் கற்றுக்கொண்டால் உங்களுக்கும் சராசரி வெற்றி அதிகமாகவே இருக்கும். ” என்றார்.
வால்ட் தன் வாழ்நாள் உழைப்பின் பயனாக ஃபைன் ஆர்ட்ஸில் கெளரவ டாக்டர்பட்டம் பெற்றிருக்கிறார். 

அதோடு தன் வாழ்நாளில் 7 எம்மி விருது, 22 ஆஸ்கார் விருதுகள் பெற்றிருக்கிறார். 59 முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். பிரபல கலை இயக்குநர்(art director) செட்ரிக் ஜிப்பான்ஸ்(Cedric Gibbons) 11 ஆஸ்கர் விருதுகளுடன் அதிக ஆஸ்கர் பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறார் என்றால் வால்ட்டின் பாய்ச்சல் எப்படிப்பட்டது என்று பார்த்துக்கொள்ளுங்கள். அதோடு அமெரிக்காவின் மிக உயரிய விருதான “the presidential medal of freedom” விருதையும் பெற்றிருக்கிறார்.


1966 நவம்பரில் திடீரென்று நோய்வாய்ப்பட்டார் வால்ட். பின்னர்தான் வால்ட் செயின் ஸ்மோக்கர் என்பதையும் நீண்டகால புகை பழக்கத்தின் காரணமாக நுரையீரல் புற்றுநோயால் தீவிரமாக பாதிப்படைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். கவலைக்கிடமான நிலையில் இருந்த வால்ட் உயிருடன் இருந்தது அதிகபட்சம் ஒரு மாதம் தான். பர்பன்க் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவந்த வால்ட் டிசம்பர் 15ம் தேதி தனது 65வது வயதில் உயிரிழந்தார். வால்ட் டிஸ்னி மறைவுக்குப் பின் அவரது உடல் அதிகுறைவு வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அறிவியல் வளர்ச்சிக்குப் பின் மீண்டும் டிஸ்னியை உயிர்பெற வைக்கலாம் என்ற எண்ணத்தில் உடலை மறைத்து வைத்திருப்பதாகவும் வதந்திகள் உலாவர ஆரம்பித்தது. ஆனால் டிஸ்னியின் உடல் எரிக்கப்பட்டு அவரது அஸ்தி கலிபோர்னியாவில் புதைக்கப்பட்டது என்று மற்றொருபக்கம் சொல்கிறார்கள்.


டிஸ்னி உயிரிழப்பதற்கு முன் “kurt russell” என்று ஒரு சிறு பேப்பரில் எழுதி வைத்திருந்தார். அது அவரது இறப்பிற்கு பின் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெயரை டிஸ்னி ஏன் எழுதி வைத்திருந்தார் என்று பலருக்கு குழப்பம். ஏனெனில் அந்த “kurt russell” என்பவர் டிஸ்னியின் தொடர்களில் ஒன்றான "Willie and the Yank: The Mosby Raiders" ல் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பிரபலமடையாத குழந்தை நட்சத்திரம். அந்த பெயரை டிஸ்னி ஏன் எழுதி வைத்தார் என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருந்தது.  பின்னர் “kurt russell” டிஸ்னி நிறுவன படங்களில் நடிக்க 10 ஆண்டுகளுக்கு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது தனிக்கதை. ஸ்கை ஹை, டெத் ப்ரூப், ஃப்யூரியஸ் 7, தி ஃபேட் ஆஃப் தி ஃப்யூரியஸ் படங்கள் என 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் kurt russell.


வால்ட்டின் சகோதரர் ராய் ஆலிவர் டிஸ்னியின் மகனான ராய் இ.டிஸ்னி தான் டிஸ்னி நிறுவனத்தின் நிர்வாகிகளுள் ஒருவராக இருந்த டிஸ்னி குடும்பத்தினரின் கடைசி மெம்பர். தந்தை ராய் டிஸ்னியின் இறப்பிற்கு டிஸ்னி நிறுவனத்திற்குள் குழறுபடிகள் ஆரம்பிக்க சேவ் டிஸ்னி என்ற பிரச்சாரத்தை 1984ல் ஆரம்பித்து டிஸ்னி நிறுவனத்தை சிக்கலில் இருந்து காப்பாற்றினார். 1984ல் டிஸ்னி நிறுவனத்தின் வைஸ் சேர்மனாக பொறுப்பேற்று 2003 வரை பணியாற்றினார். பின்னர் மீண்டும் சிக்கல் எழ இரண்டாவது முறையாக சேவ் டிஸ்னி பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அதன்பின்னர் டிஸ்னியின் கன்சல்டண்ட் பதவி தேடிவர அதில் பணியாற்றினார். 2006ல் ராயின் சொத்து மதிப்பு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 2009ம் ஆண்டு வால்ட்டை போலவே டிசம்பர் மாதத்தில் வயிற்றில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். ராய் டிஸ்னி இறக்கும்போது அவர் வசம் இருந்தது டிஸ்னியின் 16 மில்லியன் பங்குகள். அதாவது மொத்த டிஸ்னியின் பங்கில் ஒரு சதவிதம்.
ராபர்ட் ஏ,இகரின் தலைமையில் தான் டிஸ்னி இப்போது இயங்கிக்கொண்டிருக்கிறது. இகெர் தான் டிஸ்னியின் தற்போதைய சிஇஓ மற்றும் சேர்மன். டிஸ்னியின் ஏபிசி நிறுவனத்தின் ப்ரெசிடெண்ட்டாக இருந்த Iger ஐ டிஸ்னியின் சிஇஓ-வாக நியமனம் செய்ய உதவியாக இருந்தது ராய் இ.டிஸ்னி தான். ராய் இ டிஸ்னி சேவ் டிஸ்னி பிரச்சாரத்தை ஆரம்பிக்க காரணமாக இருந்த Michael Eisnerன் கட்டுப்பாட்டில் இருந்த டிஸ்னி,2005ம் ஆண்டு முதல்  இகரின் தலைமையின் கீழ் இயங்குகிறது. இகரும் சாதாரண ஆள் இல்லை,  டிஸ்னியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது அனிமேஷன்கள் தான். பிக்ஸர் நிறுவனம் உலகின் மிக பிரபலமான அனிமேஷன் நிறுவனம். அந்த நிறுவனம் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் வசம் இருந்தது. அதை 7 பில்லியன் கொடுத்து வாங்கினார் இகர். இந்த டீல் ஸ்டீவ் ஜாப்ஸை உச்சத்தில் கொண்டு நிறுத்தியது. 


பிக்ஸரை வாங்கியது முதல் அதிரடி என்றால். வால்ட் இரண்டாவது முறையாக நடுத்தெருவுக்கு வர காரணமாக இருந்த, வால்ட்டின் முதல் பிள்ளையான ஆஸ்வால்ட்டை என்பிசி யுனிவர்சல் நிறுவனத்திடமிருந்து மீண்டும் கைப்பற்றியது இரண்டாவது அதிரடி. நெகிழ்ந்து போனார் ராய் டிஸ்னி. அதன் பிறகு அவர் வாங்கி குவித்த நிறுவனங்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. உலக காமிக்ஸ் பிரியர்களை பித்துபிடிக்க வைத்துக்கொண்டிருந்த மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை 4 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கி டிஸ்னியின் கீழ் கொண்டுவந்தார். இன்றைய தேதிக்கு மார்வெல் ஸ்டுடியோஸ் பேனரில் வெளியாகும் படங்கள் அத்தனையும் பில்லியன் டாலர்கள் வசூலை வாரிக்குவிப்பவை.


டிஸ்னி நிறுவனம் தனது தொழிலை, ஸ்டுடியோ எண்டர்டைன்மெண்ட், பூங்கா மற்றும் விடுதிகள், மீடியா நெட்வொர்க்ஸ் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த பொருட்கள் விற்பனை என்று நான்கு பிரிவுகளாக பிரித்துக்கொண்டுள்ளது. இதன் கீழ்தான் டிஸ்னி மீடியா நெட்வொர்க்ஸ், ஏபிசி நெட்வொர்க்ஸ், டிஸ்னி தீம் பார்க், மார்வல் ஸ்டுடியோஸ், லூகாஸ் ஃப்லிம்ஸ், பிக்ஸர், இஎஸ்பிஎன் நிறுவனத்தின் 80% பங்கு என டிஸ்னிக்கு வருமானத்தை கொட்டிக்கொடுக்கும் பல நிறுவனங்கள் இருக்கின்றன. உலக அளவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த டாப் 5 படங்களை வரிசைப்படுத்தினால் அதில் மூன்று டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்பாக இருக்கிறது. உலகின் மொத்த பொழுது போக்கு சந்தையின் பெரும்பாலனவற்றை டிஸ்னியே ஆக்கிரமித்திருக்கிறது என்பதே நிதர்சனம். இந்தியாவிற்குள்ளும் யுடிவி மோஷன் பிக்சர்ஸ்,டிஸ்னி இந்தியா என்ற பெயரில் படங்களை தயாரிக்கும் நிறுவனமாக தன் கிளையை பரப்பியிருக்கிறது. ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த தங்கல் திரைப்படம் இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான். மொத்தத்தில் டிஸ்னி அதிகபட்ச வருமானத்தை ஈட்டித்தரும் பெரு நிறுவனமாக பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. 2017ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் கிட்டத்தட்ட 56 பில்லியன் டாலர்கள்.  இத்தனைக்கும் டிஸ்னி உயிரோடு இல்லை. 


ஆனால், டிஸ்னியின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய் மிக்கி மவுஸ் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு 100வது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மிக்கி மவுஸ் எனும் கதாப்பாத்திரம் டிஸ்னிக்கு உதித்தது இதே மே2ல் தான். டிஸ்னி இப்போது வேண்டுமானால் வருமானத்தைக்கொட்டிக் கொடுக்கும் பெரும் நிறுவனமாக இருக்கலாம். ஆனால் அதற்கான விதையைப்போட்டது, டிஸ்னிக்கு ஊன்றுகோலாய் இருந்தது மிக்கி தான். இரண்டு முறை பெரும் தோல்வியை, துரோகத்தை சந்தித்த ஒருவர் மீண்டும் கற்பக விருட்சமாக எழுந்து நிற்பதெல்லாம் அசாத்தியமானவை. வால்ட் வெற்றிக்கு சூத்திரங்களாய்  “நம் எல்லா கனவும் உண்மையாக வேண்டுமானால், பயமில்லாமல் அவற்றை எதிர் கொள்ளும் தைரியமும் நமக்கு வேண்டும். காலமும் சூழ்நிலைகளும் அடிக்கடி மாறக்கூடியவை. ஆனால் நமது நோக்கம் முழுவதும் எதிர்காலத்தை குறித்ததாகவே இருக்கவேண்டும். உங்களால் கனவுகான முடிகிறதென்றால் அதை உங்களால் நனவாக்கவும் முடியும். எனக்கு இவ்வளவையும் கொடுத்தது மிக்கி மவுஸ் என்ற ஒரு எலிதான் என்பதை நினைவில் வையுங்கள்” என்று கூறுகிறார். இந்த பாலபாடம் டிஸ்னிக்கு மட்டுமானதல்ல நமக்கானதும்தான்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!

26 minutes ago

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவாலயம் வருகை; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

30 minutes ago

ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் 3 லட்சத்து 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..

1 hour ago

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி!

2 hours ago

தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 43640 வாக்குக்கள் பின்னடைவு..!

2 hours ago

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 206377 வாக்குகள் முன்னிலை..!

2 hours ago

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.!

2 hours ago

வயநாடு தொகுதியில் 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....!

2 hours ago

வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற பிரதமர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அத்வானி வாழ்த்து..!

2 hours ago

ஆந்திரா மாநிலம், நகரி சட்டமன்ற தொகுதியில் நடிகை ரோஜா வெற்றி..!

2 hours ago

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் காத்தவராயன் 1,05,316 வாக்குகள் பெற்று வெற்றி முகம்...!

2 hours ago

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 1,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை...!

3 hours ago

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் முன்னிலை!

3 hours ago

டெல்லி வடகிழக்கு மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் பின்னடைவு!

3 hours ago

நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி...!

3 hours ago

வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி....!

3 hours ago

திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 3,70,115 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..!

3 hours ago

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங் வேட்பாளர் திருநாவுகரசர் வெற்றி...!

3 hours ago

ஆம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வில்வநாதன் வெற்றி...!

3 hours ago

லக்னோ நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமாகிய ராஜ்நாத்சிங் முன்னிலை...!

3 hours ago

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலை!

5 hours ago

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை முதல்வர் பதவியை ராஜினாமா!

5 hours ago

மே 30ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்பு!

5 hours ago

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா 1,20,132 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை...!

5 hours ago

பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே வாழ்த்து!

5 hours ago

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 27,000 வாக்குகள் முன்னிலை...!

5 hours ago

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி 7 நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாவது இடம்...

5 hours ago

ஆந்திரா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்: ஒய்.எஸ்.ஆர் காங் -149, தெலுங்கு தேசம் -2

5 hours ago

ஒடிசா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்: பிஜூ ஜனதா தளம்-100, பாஜக -27

5 hours ago

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் புதிய தமிழக கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி 37,000 வாக்குகள் பின்னடைவு...!

6 hours ago

காந்திநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அமித்ஷா முன்னிலை...!

6 hours ago

கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் மார்.கம்யூ வேட்பாளர் நடராஜன் 27,000 வாக்குகள் முன்னிலை...!

6 hours ago

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் பின்னடைவு..!

6 hours ago

ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து 5 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்கிறது நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம்...!

6 hours ago

ஆந்திர முதல்வராகிறார் ஜெகன் மோகன் ரெட்டி?

6 hours ago

தும்கூர் நாடாளுமன்ற தொகுதியில் மஜத வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா பின்னடைவு..!

6 hours ago

வயநாடு தொகுதியில் 1,98,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....!

6 hours ago

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..!

6 hours ago

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் 60,000 வாக்குகள் பின்னடைவு..!

6 hours ago

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்.வேட்பாளர் H. வசந்தகுமார் 60,000 வாக்குகள் முன்னிலை..!

6 hours ago

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 70,000 வாக்குகள் பின்னடைவு ..!

6 hours ago

லக்னோ நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்நாத் சிங் முன்னிலை..!

6 hours ago

ஜெய்பூர் புறநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்ய வர்தசிங் ராத்தோர் முன்னிலை..!

6 hours ago

குல்பர்கா நாடாளுமன்ற தொகுதியில் காங். வேட்பாளர் மல்லிகார்ஜுன் கர்கே பின்னடைவு..!

6 hours ago

அமேதி நாடாளுமன்ற தொகுதியில் காங். வேட்பாளர் ராகுல் காந்தி பின்னடைவு..!

7 hours ago

வயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....!

7 hours ago

வாரணாசியில் பாஜக வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலை..!

7 hours ago

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை..!

7 hours ago

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 ஆவது நாளாக ஏற்றம்...!

7 hours ago

தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் முன்னிலை..!

7 hours ago

கர்நாடகா தேர்தல் முன்னிலை விவரம்:பிஜேபி - 23, காங்+ ஜேடிஎஸ்- 5

7 hours ago

மத்திய பிரதேசம் தேர்தல் முன்னிலை விவரம்:பிஜேபி - 22, காங்- 7

7 hours ago

சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத் முன்னிலை..!

7 hours ago

சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமி முன்னிலை.

7 hours ago

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் வெற்றிவேல் பின்னடைவு..!

7 hours ago

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத் குமார் முன்னிலை..!

7 hours ago

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத் குமார் முன்னிலை..!

7 hours ago

டெல்லியின் 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை!

8 hours ago

ராமநாதபுரம் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ் கனி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

8 hours ago

கர்நாடகாவின் மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் நடிகர் பிரகாஷ் ராஜ் பின்னடைவு.!

8 hours ago

மத்திய பிரதேசத்தின் போபால் மக்களவை தொகுதியில் பாஜகவின் சாத்வி சிங் தாகூர் முன்னிலை - காங்கிரஸின் திக் விஜய சிங் பின்னடைவு!

8 hours ago

உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணி 32 தொகுதிகளில் முன்னிலை; SP-BSP கூட்டணி 11 இடங்களிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை!

8 hours ago

300க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றது; காங்கிரஸ் - 116; இதர கட்சிகள் - 87 தொகுதிகளில் முன்னிலை!

8 hours ago

மகராஷ்டிராவில் பாஜக கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை; காங்கிரஸ் கூட்டணி 6 இடங்களிலும், இதர கட்சிகள் 1 தொகுதியிலும் முன்னிலை!

8 hours ago

கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை...!

8 hours ago

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு...!

9 hours ago

22 தொகுதி இடைத்தேர்தலில் முன்னிலையில் திமுக: அதிமுக - 06, திமுக - 09, அமமுக - 00

9 hours ago

சிதம்பரம் ( தனி) நாடாளுமன்றத் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் பின்னடைவு...!

9 hours ago

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலை..!

9 hours ago

22 தொகுதி இடைத்தேர்தலில் சமபலத்தில் திமுக - அதிமுக

9 hours ago

கள்ளக்குறிச்சியில் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் பின்னடைவு..!

9 hours ago

ரேபரேலியில் சோனியா காந்தி முன்னிலை...!

9 hours ago

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை!

9 hours ago

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை....!

9 hours ago

தூத்துக்குடி தொகுதியில் திமுக போட்டியாளர் கனிமொழி முன்னிலை

10 hours ago

மக்களவைத் தேர்தல் தூத்துக்குடி மற்றும் வட சென்னை ஆகிய 2 தொகுதிகளில் திமுக முன்னிலை...!

10 hours ago

முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது..!

10 hours ago

மக்களவைத் தேர்தல்: நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

10 hours ago

காவிரி ஒழுங்காற்று குழு டெல்லியில் இன்று கூடுகிறது.

11 hours ago

நாட்டின் அடுத்த பிரதமர் யார்?; மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை.

11 hours ago

"நம்முடைய கடின உழைப்பு வெற்றி தரும், தோற்க மாட்டோம்!" - ராகுல் காந்தி

1 day ago

"வேறு இயக்கத்திற்கு நான் செல்லப்போவதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது!" - தோப்பு வெங்கடாசலம்

1 day ago

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்...!

1 day ago

"கருத்துக்கணிப்புகளைத் தாண்டி தமிழகத்தில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்!" - சரத்குமார்

1 day ago

“நாட்டின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி விளங்குகிறது!" - பிரதமர் மோடி

1 day ago

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது ரிசாட்-2பி செயற்கைக்கோள்!

1 day ago

நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது.

1 day ago

ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக தகவல்!

1 day ago

தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: அதிமுக - 3; திமுக - 14; இழுபறி - 5

1 day ago

தமிழகத்தில் 22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டது இந்தியா டுடே!

1 day ago

வாக்கு எண்ணிக்கையின் போது 100 சதவீத ஒப்புகைச் சீட்டுக்களை எண்ணக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

1 day ago

பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்கிறது: நக்கீரன் கோபால்

1 day ago

வாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்; தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்று புகார் அளிக்க 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் திட்டம்!

2 days ago

ஆட்சியை தக்க வைக்க தலைநகரில் இன்று பாஜக கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை!

2 days ago

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்; தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை!

2 days ago

அம்மா பேரவை இணை செயலாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்!

2 days ago

"பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை!" - திருமாவளவன்

2 days ago

அரவக்குறிச்சி வழக்கில் கமலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

2 days ago

தமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: முதல்வர் பழனிசாமி

2 days ago

கமல் முன்ஜாமீன் கோரிய வழக்கில் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு!

3 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை