Skip to main content

எஸ்.பி அலுவலகம் அருகே இளைஞர்கள் இருவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 4 பேர் கைது...!

May 15, 2019 1348 views Posted By : nandhakumarAuthors
Image

கோவை காவல் ஆணையர் அலுவலகம் அருகே இளைஞர்கள் இருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக. நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாக்குதல் வழக்கு ஒன்றில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பிரதீப் என்பவர், கோவை நீதிமன்றத்தில் கையெழுத்திட நண்பருடன் சென்றுள்ளார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மகும்பல், அரிவாளால் சராமரியாக வெட்டியதில் படுகாயமடைந்த பிரதீப், தமிழ்வாணன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை தேடி வந்த தனிப்படை போலீசார், சூர்யா, சதீஷ், ஹரி, தனபால் ஆகியோரை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து கோவை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Categories: Crime
Image
தற்போதைய செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!

7 minutes ago

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவாலயம் வருகை; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

11 minutes ago

ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் 3 லட்சத்து 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..

1 hour ago

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி!

1 hour ago

தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 43640 வாக்குக்கள் பின்னடைவு..!

1 hour ago

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 206377 வாக்குகள் முன்னிலை..!