Skip to main content

தமிழகத்தில் ரயில்வே துறையில் தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்த தடை கோரிய வழக்கு!

May 15, 2019 81 views Posted By : nirubanAuthors
Image

தமிழகத்தில் ரயில்வே துறையில் தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்த தடை கோரிய வழக்கில், தென்னக ரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த மணவாளன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி - திருமங்கலம் ரயில்வே பாதையில் கடந்த 8ம் தேதி பெரும் விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது என்றும், ஊழியர்களுக்கு இடையேயான தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனையே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

தமிழகத்தில் பணியாற்றும் 15 முதல் 20 சதவீத ரயில்வே ஊழியர்கள், தமிழ் மொழி தெரியாதவர்களாக உள்ளனர் என்றும், குறிப்பாக ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட் உள்ளிட்ட பணிகளில் இருப்பவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை என்றும் கூறியிருந்தார்.எனவே ரயில்வே துறையில் தமிழ் தெரியாதவர்களை முக்கிய பொறுப்புகளில் பணியமர்த்த தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தென்னக ரயில்வேயின் பொதுமேலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

Categories: Tamilnadu
Image
தற்போதைய செய்திகள்

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவாலயம் வருகை; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

40 seconds ago

ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் 3 லட்சத்து 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..

53 minutes ago

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி!

1 hour ago

தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 43640 வாக்குக்கள் பின்னடைவு..!

1 hour ago

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 206377 வாக்குகள் முன்னிலை..!