Skip to main content

வடகிழக்கின் ஆதரவு நரேந்திர மோடிக்கா? ராகுலுக்கா?

April 09, 2019
Image

கா. அருண்

கட்டுரையாளர்

Image

7 சகோதரி மாநிலங்கள் (7 sisters) என்று அழைக்கப்பட்டு வந்த வடகிழக்கு மாநிலங்களில் 1980களில் நிர்வாக வசதிக்காக 8வது மாநிலமாக அசாமும் இணைக்கப்பட்டது. அசாம், நாகலாந்து, அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், சிக்கிம், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய 8 மாநிலங்கள் வடகிழக்கு மாநிலங்கள் என அறியப்படுகின்றன. 

இந்தியாவின் இயற்கை வளம் அதிகம் நிறைந்த பகுதியாக வடகிழக்கு மாநிலங்கள் விளங்குகின்றன. புவியியல் ரீதியாக இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இந்த மாநிலங்கள் அண்டை நாடுகளான சீனா, நேபாளம், வங்காளதேசம், பர்மா (மியான்மர்), பூடான் ஆகிய ஏதேனும் ஒரு நாட்டின் எல்லையை ஒட்டியே அமைந்துள்ளது.

இம்மாநிலங்களின் மொத்த மக்கள் தொகை இந்திய மக்கள் தொகையில் 4% மட்டுமே. அசாம் மாநிலத்தை தவிர பிற மாநிலங்கள் அனைத்துமே அளவில் மிகச்சிறியவை. இவை சென்னையின் மக்கள் தொகைக்கு கூட ஈடாகாது. மேற்குவங்கத்தில் உள்ள 21 கி.மீ நீளம் கொண்ட குறுகிய பகுதியான ‘சிலிகுரி பாதை’ இந்தியாவின் இதர பகுதிகளோடு வடகிழக்கு மாநிலங்களை இணைக்கிறது.

பொருளாதார ரீதியில் மற்ற மாநிலங்களை விட சற்று பின்னடைவுடன் காணப்படும் இந்த மாநில மக்கள் பெருமளவில் மலைவாழ் மக்களாகவோ, பழங்குடிகளாகவோ உள்ளனர். 

ஒவ்வொரு மாநிலமும் கலாச்சாரம், பாரம்பரிய ரீதியாக தனித்தன்மை கொண்டிருக்கின்றன. இதர இந்திய பகுதிகளில் காணப்படாத இயற்கை வளம் இம்மாநிலங்களில் நிறைந்திருக்கின்றன.

அரசியல் ரீதியாக வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பாஜக செல்வாக்குடன் காணப்படுகிறது. 6 மாநிலங்களில் பாஜக நேரடியாகவும், 2 மாநிலங்களில் பாஜகவின் கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆட்சியில் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்தின் அரசியல் நிலவரத்தையும் சற்று விரிவாக பார்க்கலாம். 

அசாம்:

வடகிழக்கு மாநிலங்களுள் அசாம் மட்டுமே மக்கள் தொகையில் பெரிய மாநிலமாகும். வடகிழக்கு மாநிலங்களில் மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிகளில் பாதிக்கும் மேலான (14) தொகுதிகள் அசாமில் தான் உள்ளது. 

அசாமை பொருத்தவரை பிரதான கட்சிகளான காங்கிரஸ், பாஜக தவிர்த்து பத்ருதின் அஜ்மல் தலைமையிலான அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF), பிரஃபுல்லா குமார் மஹந்தா தலைமையிலான அசோம் கன பரிஷத் (AGP), ஹக்ரமா மொஹிலரி தலைமையிலான போடோலாந்து மக்கள் முன்னணி (BPF) ஆகியவை குறிப்பிடத்தக்க கட்சிகளாக உள்ளன. இங்கு தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது.

கடந்த 2001 முதல் 2016 வரை தொடர்ச்சியாக 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸை அப்புறப்படுத்திவிட்டு அறுதிப்பெரும்பான்மையுடன் வென்று முதல் முறையாக மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது பாஜக. கடந்த ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது கவனிக்கத்தக்கது. 50% அதிகமான இடங்களை அக்கட்சி வென்றுள்ளது.

கடந்த ஜனவரியின் மத்தியில் ஆளும் பாஜக அரசு, குடியுரிமை சட்டதிருத்த மசோதாவினை மக்களவையில் தாக்கல் செய்தது. அம்மசோதாவிற்கு அசாம் மட்டுமல்லாது வடகிழக்கு மாநிலங்கள் பெரும்பாலானவற்றிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை கண்டித்து பாஜக கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்த AGP திடீரென வெளியேறியது, அமைச்சரவையில் அக்கட்சி சார்பில் அங்கம் வகித்த 3 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இருப்பினும் அந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. இதனைத்தொடர்ந்து இரண்டு மாதகால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்பியது AGP.
மாநில கட்சிகளான AGP மற்றும் BPF ஆகியவை பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது அக்கட்சியின் பிளஸ் பாயிண்டுகளாகும். 

இருப்பினும் அசாம் மாநில பாஜகவின் முக்கியப் புள்ளியான மாநில நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிற்கு போட்டியிட வாய்ப்பு தராதது அவரது ஆதரவாளர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல்களை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் ஒரு தொகுதியில் போட்டியிடுவது சிரமத்தை ஏற்படுத்தும் என பாஜக வட்டாரம் தெரிவித்துள்ளது. இதே போல அம்மாநிலத்தில் பணம் பெற்றுக்கொண்டு அரசு வேலைகளை வேண்டியவர்களுக்கு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவை அனைத்தும் பாஜக கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளாக பார்க்கப்படுகின்றன.
 
காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்தே வருகிறது. இம்முறை அக்கட்சி இங்கு தனித்தே களம் காணுகிறது. 

Barpeta, Dhubri மற்றும் Karimganj மக்களவை தொகுதிகளில் கணிசமாக வாழும் வங்காளி மொழி பேசும் இஸ்லாமியர்களிடம் மட்டுமே UDF கட்சி செல்வாக்குடன் உள்ளது. எனினும் இந்த கட்சிக்கு செல்லும் அச்சமூக வாக்குகளில் ஒரு பங்கை காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்து கொள்கிறது. 

2009 முதல் 2014 வரை நடைபெற்ற நான்கு நாடாளுமன்ற தேர்தல்களை கணக்கில் கொண்டால். அசாமில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை தொடர்ந்து இழந்து வருவதும், அந்த இடத்தை பாஜக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளதும் கண்கூடாகத் தெரிகிறது. இம்முறை பாஜகவிற்கு நம்பிக்கை தரக்கூடிய மாநிலங்களில் அசாம் முக்கியமானதாக மாறியுள்ளது. 

2014 தேர்தலில் பாஜக 7 இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் UDF தலா 3 இடங்களிலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக மோதலில், பாஜகவின் கையே மேலோங்கியுள்ளது. இருப்பினும் குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்ட விவகாரம் தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதே கள நிலவரமாகும்.

அருணாச்சல பிரதேசம்:

அசாம், நாகலாந்து மாநிலங்களுடனும், பூடான், மியான்மர் மற்றும் சீனா ஆகிய அண்டை நாடுகளுடனும் எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கும் மற்றொரு வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் அரசியல் பாஜக, காங்கிரஸ் மற்றும் அருணாச்சல மக்கள் கட்சி (NPP) ஆகிய கட்சிகளை சுற்றியே உள்ளது. இருப்பினும் சமீப காலங்களில் இது அரசியல் ஸ்திரமற்ற மாநிலமாக உருமாறியுள்ளது.

2 நாடாளுமன்ற மற்றும் 60 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய அருணாச்சல பிரதேசத்தில் முதல் கட்டமான ஏப்ரல் 11 அன்று நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 

கடந்த 2014 தேர்தலில் மொத்தமுள்ள 60 சட்டமன்ற தொகுதிகளில் 42ல் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்தது. நாடாளுமன்ற தொகுதிகளை பொருத்தவரையில் ஒன்றில் காங்கிரஸும் மற்றொன்றில் பாஜகவும் வென்றிருந்தன.

கடந்த ஏப்ரல் 2015ல் அங்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி ஒரு ஆண்டிற்கு நீடித்தது. உட்கட்சி பூசலில் அம்மாநில முதல்வராக இருந்த பெமா காண்டு மொத்தமுள்ள 42 எம்.எல்.ஏக்களில் 41 பேருடன் மாநில கட்சியான NPPல் ஐக்கியமானார். இதன் மூலம் அருணாச்சலில் ஆட்சியை பறிகொடுத்து பலத்த அடிவாங்கியது காங்கிரஸ் கட்சி.

இதன்பின்னர் அடுத்த சில மாதங்களிலேயே NPP கட்சியில் இருந்து விலகி பெமா காண்டு மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் பாஜகவில் இணைந்தனர். இதன் மூலம் தற்போது  48 எம்.எல்.ஏக்களுடன் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது.

அருணாச்சலை பொருத்தவரை NPP கட்சியானது பாஜகவுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் இருந்தாலும் அங்கு மும்முனை போட்டியே ஏற்பட்டுள்ளது. காங்கிரஸும் இங்கு தனித்தே களம் காண்கிறது.

அனைத்து சட்டமன்ற மற்றும் மக்களவை தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ‘மிஷன் 60+2’ என்ற தாரக மந்திரத்துடன் பாஜக இத்தேர்தலில் களமிறங்கியுள்ளது. பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரண் ரிஜுஜு மத்திய அமைச்சராக உள்ளார்.

இரண்டு தொகுதிகளில் எதிர்த்து போட்டியிட வேட்பாளர்கள் களமிறங்காததாலும், மற்றொரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கடைசி நாளில் வேட்புமனுவை வாபஸ் பெற்றதாலும் வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியே இல்லாமல் 3 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. இது அக்கட்சிக்கு நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. 

மேகாலயா:

இந்தியாவின் மழைப்பொழிவு அதிகம் நிறைந்த மாநிலம் என்ற பெருமை கொண்ட மேகாலயாவில் காடுகள் அதிகம் உள்ளது. மாநிலத்தின் பரப்பளவில் 70% காடுகள் என்பது சிறப்பானதாகும். உலகிலேயே அதிக மழை பொழிவு கொண்ட பகுதியாக அறியப்படும் ‘சிரபூஞ்சி’ மேகாலயாவில் தான் உள்ளது. மழைபொழிவுக்கான உலக சாதனை புத்தகத்தில் மேகாலயாவின் Mawsynram இடம்பெற்றுள்ளது. இயற்கை வளம் அதிகம் என்றாலும் தொழில்துறை, இதர வளர்ச்சியில் இந்த மாநிலம் பின்தங்கியே உள்ளது.

இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுவோர் பெரும்பான்மையாக வாழும் 3 மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. இங்கு 75% அதிகமானோர் கிறிஸ்தவர்களே. இம்மாநிலத்தின் அலுவல் மொழியாக ஆங்கிலம் உள்ளது.

மேகாலயாவில் காங்கிரஸ் மற்றும் NPP ஆகியவையே பிரதானக் கட்சிகளாகும். இருப்பினும் NPP கட்சியுடன் பாஜக, மக்கள் ஜனநாயக முன்னணி (PDF), HSPDP, UDP ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வென்றிருந்தாலும், NPP மற்றும் கூட்டணி கட்சிகள் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றின. NPP கட்சியின் தலைவர் கன்ராட் சங்மா முதல்வராக உள்ளார்.

இங்குள்ள Shillong, Tura ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளில் கடந்த முறை காங்கிரஸ் மற்றும் NPP தலா ஒரு தொகுதியில் வென்றன. இந்த முறையும் இந்த இரண்டு கட்சிகளிடையே தான் பிரதான போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் NPP அங்கம் வகிப்பதால் பாஜக பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருக்கலாம்.

Tura தொகுதியை பொருத்தவரையில் காங்கிரஸின் முகுல் சங்மா மற்றும்
NPP வேட்பாளர் அகதா சங்மா ஆகியோருக்கு இடையில் தான் உண்மையான போட்டி. இதே போல Shillong தொகுதியில் சிட்டிங் எம்.பியான காங்கிரஸின் VINCENT H. PALA, பாஜகவின் SANBOR SHULLAI மற்றும் ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் (UDP) JEMINO MAWTHOH ஆகியோருக்கு இடையில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

மணிப்பூர்:

கலாச்சாரம், நாகரிகம் போன்றவற்றில் பழமையை பறைசாற்றும் மணிப்பூரின் மக்கள் தொகையில் 40% பேர் பழங்குடியினரே. ஹிந்துக்களும், கிறிஸ்தவர்களும் இங்கு சம அளவில் வசிக்கின்றனர். சுற்றுலாவையே இந்த மாநிலம் பெரிதும் நம்பியுள்ளது.

மணிப்பூரில் காங்கிரஸ் மற்றும் பாஜக பிரதான கட்சிகளாக உள்ளன. இவை தவிர நாகா மக்கள் முன்னணி, npp, லோக் ஜனசக்தி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை சிறிய அளவில் செல்வாக்கு பெற்றுள்ளன. திரிணாமுல் காங்கிரஸை தவிர்த்து மற்ற 3 கட்சிகளுமே பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

inner manipur, outer manipur என மொத்தம் இரண்டு மக்களவை தொகுதிகள் உள்ளன. 2009 மற்றும் 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் காங்கிரஸே இரண்டு தொகுதிகளையும் வென்றுள்ளது. இந்த நிலையில் 2017ம் ஆண்டு  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வென்றிருந்தாலும் கூட கூட்டணி கட்சிகளின் உதவியுடன் முதல் முறையாக பாஜக இங்கு ஆட்சி அமைத்தது. 

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து 8 எம்.எல்.ஏக்களும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்.எல்.ஏவும் பாஜவில் இணைந்தனர். இது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மாநில அரசியலிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. சமீபத்தில் ஒரே நாளில் பாஜக பிரமுகர்கள் 21 பேர் காங்கிரஸில் இணைந்தனர், அதற்கு அடுத்த நாளில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் 71 பேர் பாஜகவில் இணைந்தனர். இதன் மூலம் தேர்தல் பரபரப்பு உச்சத்திற்கு சென்றுள்ளது.

இந்தத் தேர்தலில் வடகிழக்கு பிராந்தியத்தில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இது மணிப்பூர் தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கலாம். 

திரிபுரா: 

வடகிழக்கு மாநிலங்களில் சமீபத்தில் அரசியல் ரீதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருப்பது திரிபுரா. அதிக கல்வியறிவு கொண்ட மாநிலங்களுள் ஒன்றாக (87.75%) விளங்கும் திரிபுராவில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே கோலோச்சி வந்தது. 25 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்த அக்கட்சிக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பாஜக.

வெறும் 1.5 சதவீத அளவிற்கு மட்டுமே வாக்கு வங்கியை கொண்டிருந்த பாஜக, அறுதிப்பெறும்பான்மையுடன் வெற்றி பெற்று நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்தது. காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு போட்டியாக ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.

தற்போதைய சூழலில் திரிபுரா மக்களின் அபிமானத்தை பாஜக பெற்றுள்ளதாகவே கூறப்படுகிறது. 25 ஆண்டுகளாக வலதுசாரி ஆட்சியை பார்த்து பழகிப்போன அம்மாநில மக்கள் புதிய பாதையில் பயணிக்கத்தொடங்கியுள்ளனர்.

வலதுசாரி கூட்டணியில் CPM, CPI, RSP, AIFB ஆகிய கட்சிகள் ஓரணியிலும், பாஜக, IPFT கட்சிகள் ஓரணியிலும், காங்கிரஸ் கட்சி தனித்தும் இம்முறை தேர்தலை சந்திக்க உள்ளன.

கடந்த 3 முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் அங்குள்ள இரண்டு தொகுதிகளிலுமே மார்க்ஸிஸ்ட் கட்சியே வென்றிருந்தது. காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் என மும்முனை போட்டி ஏற்பட்டிருந்தாலும் கூட இம்முறை பாஜகவே இரண்டையும் கைப்பற்றும் என்பதே கள யதார்த்தமாக உள்ளது. முதல்முறையாக இந்த மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் எம்.பிக்கள் தேர்வாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 

நாகலாந்து:

வடகிழக்கு மாநிலங்களின் காஷ்மீர் என நாகலாந்தினை குறிப்பிடலாம். மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினரை பிரதானமாகக் கொண்ட நாகலாந்தில் காஷ்மீர் போலவே தீர்க்கப்படாத பிரச்சனை நீடித்து வருகிறது. எழில் கொஞ்சும் காட்சிகளை உள்ளடக்கிய நாகலாந்தில் வாழும் நாகா இன மக்களில் சில பிரிவினர் Greater Nagalim என தனி பிரதேசம் கோரி ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். மணிப்பூர், அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மியான்மர் நாட்டின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசத்தை உருவாக்க வேண்டும் என்பதே அந்த கோரிக்கையாகும். இது நாகலாந்து அரசியலிலும் எதிரொலித்து வருகிறது. 

10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை அகற்றிவிட்டு கடந்த 2003 முதலே நாகாலாந்தின் ஜனநாயகக் கூட்டணி அங்கு ஆட்சியில் இருந்தது. இதில் பாஜக, NPF, NPP, NDPP, JDU ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இங்கு ஒரே ஒரு பாரளுமன்ற தொகுதி மட்டுமே உள்ளது.

கடந்த முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், முதல்வராக இருந்த Neiphiu Rio ராஜினாமா செய்துவிட்டு  நாகாலாந்தின் ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் K.V. Pusaவை விட 4 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்ததாக அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை இதன் மூலம் அவர் பெற்றார்.

தற்போதைய சூழலில் நாகலாந்தில் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில்  K L Chishi, ஆளும் கட்சியான NDPPயின் சிட்டிங் எம்.பியான Tokheho Yepthomi மீண்டும் களத்தில் குதித்துள்ளார், NPP சார்பில் Hayithung Tungoe என்பவர் களமிறங்குகிறார். இதுமட்டுமல்லாமல் சுயேட்சையாக Thromwa Konyak என்பவரும் களத்தில் உள்ளார்.

NDPP வேட்பாளருக்கு பாஜக ஆதரவை அளித்துள்ளது. பிரதான எதிர்கட்சியான  Naga People's Front வாக்குகள் சிதறாமல் இருக்க காங்கிரஸ் வேட்பாளருக்கு தனது ஆதரவை அளித்துள்ளது. அக்கட்சி சார்பில் வேட்பாளர் களமிறக்கப்பட்வில்லை என்றாலும் அக்கட்சியின் மொத்தமுள்ள 27 எம்.எல்.ஏக்களில் 7 பேர் NDPP வேட்பாளருக்கு தங்களது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மிசோரம்:

இந்தியாவிலேயே பழங்குடியின மக்கள் அடர்த்தி மிகுந்த மாநிலமாக மிசோரம் விளங்குகிறது. இந்த மாநிலத்தின் காடுகளின் பரப்பளவு 91% ஆக உள்ளது. அதே போல இந்தியாவில் இரண்டாவது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும் மிசோரம் உள்ளது. இங்கு கிறிஸ்துவர்களே (87%) அதிகம்.

பல கட்சி ஜனநாயக கட்டமைப்பு என்பதே மிசோரம் மாநிலத்தின் அரசியல் சூழலாக உள்ளது. மிசோ தேசிய முன்னணி (MNF) மற்றும் காங்கிரஸ் ஆகியவையே ஆட்சியை கைப்பற்றுமளவிற்கான பிரதான கட்சிகள் ஆகும். 1972 முதல் இந்த இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன.

7 சிறிய கட்சிகள் இணைந்து ஜொராம் மக்கள் இயக்கம் (ZPM) கடந்த 2018ல் உருவானது.

கடந்த டிசம்பரில் இங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் MNF (பாஜக கூட்டணி) தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸால் 5 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. ZPM பிரதான எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

இங்கு ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதி மட்டுமே உள்ளது. 2009 மற்றும் 2014 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. 
இம்முறை ஆளும் MNF சார்பில் Lalrosanga வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதேபோல சுயேட்சையாக பத்திரிக்கையாளர் Lalnghinglova Hmar களமிறங்கியுள்ளார். இவருக்கு ZPM மற்றும் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளன. இந்த இரண்டு பேருக்கு மத்தியில் தான் பிரதான போட்டி ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் பாஜகவும் தன் பங்கிற்கு Nirupam Chakma என்பவரை களமிறக்கியுள்ளது. 


சிக்கிம்: 

இந்தியாவின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்டதும், பரப்பளவில் இரண்டாவது சிறிய மாநிலமாகவும் விளங்கும் சிக்கிம் இயற்கை எழில் நிறைந்த மாநிலமாக உள்ளது. இந்தியாவின் மிகப்பெரியதும், உலகின் 3வது பெரியதுமான கஞ்சஞ்சங்கா சிகரம் சிக்கிமில் தான் உள்ளது. மாநில பரப்பளவில் 35%  Khangchendzonga தேசிய சரணாலயம் ஆக்கிரமித்துள்ளது. நறுமணப்பொருட்கள் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பகுதியாக சிக்கிம் விளங்குகிறது.

நாட்டிலேயே இயற்கை விவசாயத்திற்கு மாறிய முதல் மாநிலம் என்ற அடையாளமே சிக்கிமை தனித்துவமாக்கியுள்ளது. சுமார் 6 லட்சம் மட்டுமே மக்கள் தொகை கொண்ட சிக்கிமில் ஒரே ஒரு மக்களவை தொகுதி மட்டுமே உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுடன் 32 தொகுதிகளை உள்ளடக்கிய சட்டமன்ற தேர்தலையும் சந்திக்க உள்ளது சிக்கிம்.

சிக்கிம் அரசியலில் முதல்வர் Pawan Kumar Chamling தலைமையிலான Sikkim Democratic Front (SDF) மற்றும்     Prem Singh Tamang தலைமையிலான Sikkim Krantikari Morcha (SKM) ஆகிய இரண்டு கட்சிகளே பிரதான போட்டியாளர்கள். இங்கு பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை தங்களது இருப்பை காட்டிக்கொள்ளும் கட்சிகளாகவே வலம்வருகின்றன.

1994ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறையாக முதல்வர் பதவியை அலங்கரித்து வருபவர் Pawan Kumar Chamling. அசைக்கமுடியாத சக்தியாக திகழும் அவருக்கு அடுத்த நிலையில் எதிர்கட்சியான SKM  உள்ளது. இதனிடையே இந்திய முன்னாள் கால்பந்து பந்து நட்சத்திர வீரரான பாய்சுங் பூட்டியா புதிதாக தொடங்கிய Hamro Sikkim கட்சியும் இந்த முறை தேர்தலை முதல் முறையாக சந்திக்க உள்ளது.

சிக்கிமின் ஒரே நாடாளுமன்ற தொகுதியில் SDF DB Katwal-ஐ எதிர்த்து SKM கட்சியின் Indrahand Subba களமிறங்குகிறார். இந்த இரண்டு கட்சிகளுமே பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள 8 மாநிலங்களின் தற்போதைய அரசியல் சூழல் பாஜகவிற்கு சாதகமாக தோன்றினாலும், அக்கட்சி கொண்டு வந்த குடியுரிமை சட்டதிருத்த மசோதாவினை வடகிழக்கு மாகாணங்கள் அனைத்தும் எதிர்கின்றன. இது பாஜகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் எதிரான வாக்குகளாக மாறுமா? அதனை காங்கிரஸ் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளுமா என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாகும். இவை அனைத்திற்கும் விடை மே 23ல்...

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

குடிநீர் பிரச்னையை போக்க, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.

21 hours ago

2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி அழைப்பு

21 hours ago

உலகக்கோப்பை கிரிக்கெட் - இலங்கை அணி வெற்றி பெற 335 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி...!

1 day ago

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு!

1 day ago

பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி டெல்லியில் சந்திப்பு!

1 day ago

சென்னையில் ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை; மோதலில் காயம் அடைந்த 2 காவல் ஆய்வாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை..

1 day ago

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்; தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு வலியுறுத்த முதல்வர் திட்டம்.

1 day ago

உலகக் கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி...!

2 days ago

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு...!

2 days ago

குடிநீர் தட்டுப்பாட்டால் சென்னையில் பல பகுதிகளில் ஹோட்டல்கள் மூடப்படுகிறது!

2 days ago

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்!

2 days ago

பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம்; தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.

2 days ago

தீவிரவாத ஊக்குவிப்பு நடவடிக்கைகளை கைவிட்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை; சீன அதிபரிடம் மோடி திட்டவட்டம்.

2 days ago

நாட்டிங்காமில் தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் இந்தியா - நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது...!

3 days ago

அருணாச்சலப்பிரதேசத்தில் விபத்துக்குள்ளான AN32 ரக விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு....!

3 days ago

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது...!

3 days ago

AN32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவிப்பு!

3 days ago

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதி நடக்கிறது: வைகோ

3 days ago

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து, ஊடக விவாதங்களில் பங்கேற்க கட்சி நிர்வாகிகளுக்கு தடை

3 days ago

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய கோவையை சேர்ந்த 6 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு!

3 days ago

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி...!

4 days ago

முத்தலாக்கை தடை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்...!

4 days ago

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானுக்கு 308 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி..!

4 days ago

உ.பி.-யின் முதல் பெண் பார் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்வேஷ் யாதவ் கொலை; தலைவராக பொறுப்பேற்ற இரண்டு நாட்களில் ஆக்ரா நீதிமன்றத்தில் சக வழக்கறிஞரால் சுட்டுக் கொலை!

4 days ago

ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்.எல்.ஏ. ரோஜா நியமனம்

4 days ago

“ஜூலை 15ம் தேதி அதிகாலை 2.51 மணி அளவில் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும்!” - இஸ்ரோ சிவன்

4 days ago

ஊடக விவாதங்களில் அதிமுக சார்பாக யாரும் பங்குபெற கூடாது என தலைமை கழகம் அறிவிப்பு!

4 days ago

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

4 days ago

திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ராதாரவி அதிமுகவில் இணைந்தார்!

4 days ago

இங்கிலாந்து புறப்பட்டார் ரிஷப் பந்த்

4 days ago

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

4 days ago

முதலமைச்சர் பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்க வேண்டுமென ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!

4 days ago

ஆண் உறுப்பை அறுத்து கொலை செய்த சைக்கோ கொலைகாரன் கைது!

4 days ago

மோடி எதிர்ப்பு அலையை விட ஸ்டாலினின் ஆதரவு அலை தான் தமிழகத்தின் வெற்றிக்கு காரணம்: உதயநிதி ஸ்டாலின்

4 days ago

அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக தொடரப்பட்ட வழக்கில், திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

4 days ago

கோவை உக்கடம் அன்புநகர், குனியமுத்தூர் உட்பட 7 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை!

4 days ago

நாளை பிற்பகல் 3 மணிக்கு கீழடி 5 ஆம் கட்ட அகழ்வாய்வு தொடங்கும்: அமைச்சர் பாண்டியராஜன்

4 days ago

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம்!

4 days ago

நடிகர் சங்க பிரச்சனைகளை தீர்க்கும் அணிக்கே ஆதரவு என விஜய் சேதுபதி அறிவிப்பு!

4 days ago

பாகிஸ்தான் தொலைக்காட்சி இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்து விளம்பரம் வெளியிட்டுள்ளதால் பெரும் சர்ச்சை!

4 days ago

இலங்கை - வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டது

5 days ago

காணாமல் போன AN32 விமானத்தின் பாகங்கள் அருணாச்சல பிரதேசத்தின் லிபோ பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்

5 days ago

8 வழிச்சாலை திட்டத்தில் காட்டும் ஆர்வத்தை காவிரி விவகாரத்தில் காட்டாதது ஏன்: மு.க.ஸ்டாலின்

5 days ago

அமெரிக்காவில் 51 மாடி கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்.

5 days ago

அரபிக் கடலில் இன்று உருவாகிறது புதிய புயல்; நாளை நள்ளிரவு அதி தீவிர புயலாக மாறும்.

5 days ago

மறைந்த நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு.

5 days ago

பிரபல நாடக நடிகரும், தமிழ் சினிமா வசன கர்த்தாவுமான கிரேசி மோகன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று மதியம் 2.00 மணி அளவில் காலமானார்!

6 days ago

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு!

6 days ago

பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் காலமானார்!

6 days ago

எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள தோப்பூரில் சஞ்சாய்ராய் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு ஆய்வு!

6 days ago

எட்டுவழிச் சாலை திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக, தேவைப்பட்டால் முதல்வரை சந்தித்து வலியுறுத்துவேன்: அன்புமணி

6 days ago

தமிழகத்திலும் பாஜக வெற்றிக்கொடியை ஏற்றும் என பிரதமர் சூளுரை!

6 days ago

விஷால் அணிக்கு போட்டியாக, பாக்கியராஜ் அணி வேட்புமனு தாக்கல்!

6 days ago

நாட்டில் மத மோதல் நீடித்தால், இன்னொரு பிரபாகரன் உருவாகலாம்: அதிபர் சிறிசேனா

6 days ago

மக்கள் பிரச்னைகளை விவாதிக்க, உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

6 days ago

அதிமுக நிர்வாக முறை பற்றி பொதுவெளியில் நிர்வாகிகள் கருத்து கூற தடை!

6 days ago

ஒற்றைத் தலைமை சர்ச்சை வெடித்துள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை!

1 week ago

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது!

1 week ago

ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் வரும் 12ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

1 week ago

ஒருவேளை திமுக பள்ளி நடத்தினால் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும்!: கனிமொழி

1 week ago

அதிமுகவில் ஒற்றைத்தலைமை குறித்த ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு பதிலளிக்க தமிழிசை மறுப்பு!

1 week ago

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் ஆதரவு!

1 week ago

கட்சிக்கு ஒற்றைத் தலைமையே வேண்டும், என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா போர்க்கொடி!

1 week ago

உலககோப்பை தொடரில் இன்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா !

1 week ago

சித்தா படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் அவசியமா என விரைவில் அறிவிக்கப்படும்:அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

1 week ago

உயர்நீதிமன்ற கண்டனத்தால் தமிழகம் முழுவதும் ஹெல்மெட் சோதனை தீவிரம்!

1 week ago

உலககோப்பை தொடரில் 2வது வெற்றியை ருசித்தது இங்கிலாந்து!

1 week ago

மீண்டும் வெடித்தது இம்சை அரசன் 24ம் புலிகேசி பட சர்ச்சை!

1 week ago

உள்ளாட்சித் தேர்தல் தேதி வெளியான பின் கூட்டணி அறிவிக்கப்படும்: தமிழிசை சவுந்தரராஜன்

1 week ago

2 நாள் வெளிநாட்டு பயணமாக பிரதமர் மோடி மாலத்தீவு, இலங்கை பயணம்!

1 week ago

9.19 டிஎம்சி தண்ணீரை திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்!

1 week ago

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர திமுக பாடுபடும் : மு.க ஸ்டாலின்

1 week ago

ஆந்திராவில், 5 துணை முதல்வர்கள் உள்ளிட்ட 25 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!

1 week ago

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!

1 week ago

"‘தல60’ திரைப்படத்தில் நான் நடிப்பதாக வெளியானது தவறான தகவல்...!" - எஸ்.ஜே.சூர்யா

1 week ago

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்...!

1 week ago

ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!

1 week ago

“சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை நிச்சயம் அமைக்கப்படும்!” - முதல்வர் பழனிசாமி

1 week ago

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக முதல்வர் பழனிசாமி அறிக்கை!

1 week ago

MBBS, BDS படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம்!

1 week ago

திருநெல்வேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்த்த செவிலியர்கள்: தாய்-சேய் பலி

1 week ago

கோஷ்டி மோதல்களை முடிவுக்கு கொண்டு வர ப.சிதம்பரம் புதிய யோசனை!

1 week ago

நிதி ஆயோக் அமைப்பை மறுசீரமைக்க பிரதமர் மோடி ஒப்புதல்!

1 week ago

“NEFT, RTGS பண பரிவர்த்தனைக்கான வங்கிக் கட்டணம் ரத்து!" - ரிசர்வ் வங்கி

1 week ago

ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களின் அபராத தொகையை அதிகரிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

1 week ago

தமிழகத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கி புதிய அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

1 week ago

வங்கதேச அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி!

1 week ago

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில், தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தற்கொலை!

1 week ago

வேலைவாய்ப்பை அதிகரிக்க கேபினட் குழுவை அமைத்தார் பிரதமர் மோடி!

1 week ago

மொழி கொள்கை தொடர்பாக காலையில் போட்ட ட்வீட்டை மாலையில் நீக்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

1 week ago

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா!

1 week ago

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி!

1 week ago

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து, ஒருநாள் தொடரில் தனது 23 சதத்தினை பதிவு செய்தார் ரோகித் சர்மா!

1 week ago

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷியா என்ற மாணவி வீட்டில் தீக்குளித்து தற்கொலை!

1 week ago

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் ரிதுஸ்ரீ என்ற திருப்பூர் மாணவி தற்கொலை!

1 week ago

இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வேலை வாய்ப்பை உருவாக்குவது தொடர்பாகவும் இரண்டு கேபினட் குழுக்கள் அமைத்துள்ளார் பிரதமர் மோடி!

1 week ago

பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக்க வேண்டும் என்ற முதல்வர் பழனிசாமியின் ட்வீட் நீக்கம்!

1 week ago

நீட் தேர்வு முடிவு: தமிழக மாணவி ஸ்ருதி, தேசிய அளவில் 57வது இடத்தை பெற்றார்!

1 week ago

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது...!

1 week ago

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு; www.nta.ac.in, www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் காணலாம்.

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை